/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆனங்கூர் ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக மூடல்
/
ஆனங்கூர் ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக மூடல்
ADDED : நவ 23, 2025 01:34 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை-திருச்செங்கோடு வழித்தடத்தில், ஆனங்கூர் பகுதியில் ரயில்பாதை செல்கிறது. இது, சென்னை--கேரளா செல்லும் பிரதான ரயில் பாதையாக உள்ளது. இந்த ரயில்வே கேட் வழியாக, வெப்படை, திருச்செங்கோடு சாலை வழித்தடம் வழியாக, தினமும் பஸ், லாரி, கார், கல்லுாரி வாகனங்கள் சென்று வருகின்றன. பராமரிப்பு பணிக்காக, இந்த ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து, ஆனங்கூர் பஞ்., முன்னாள் தலைவர் சிங்காரவேலு கூறியதாவது:
ஆனங்கூர் பகுதியில் உள்ள ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக அடிக்கடி மூடப்படுகிறது. நாளை(இன்று) ஒரு நாள் பராமரிப்பு பணிக்காக மூடப்படுகிறது. இது முக்கிய வழித்தடமாக காணப்படுவதால், வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். ரயில் கேட் மூடப்படும் போது போக்குவரத்து இந்த வழித்தடத்தில் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. இப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க, சில ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆனால், மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

