/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சிலிண்டரில் காஸ் கசிவால் தீ விபத்து
/
சிலிண்டரில் காஸ் கசிவால் தீ விபத்து
ADDED : நவ 23, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை, கார்கூடல்பட்டி, கப்பலுாத்து, தெற்குகாட்டை சேர்ந்தவர் சின்னகுப்பன் மகன் கந்தசாமி, 45; இவர் வீட்டில், நேற்று இரவு உணவு சமைக்க காஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார்.
அப்போது, டியூபில் காஸ் கசிந்துகொண்டிருந்ததை கவனிக்காமல் அடுப்பை பற்ற வைத்துள்ளனர். இதனால் சமையலறையில் தீ பற்றிக்கொண்டது.
இதுகுறித்து தகலறிந்த ராசிபுரம் தீயணைப்பு துறையினர், விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்தனர். யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

