ADDED : நவ 23, 2025 01:33 AM
ராசிபுரம், ராசிபுரத்தில், சேறும் சகதியுமான சாலையால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
ராசிபுரம், 26வது வார்டு காட்டூர் காட்டுக்கொட்டாய் பகுதியில், 20க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இவர்களுக்கான பொது பாதை மண்ணாக உள்ளதால், சிறிது மழை பெய்தாலும் நடக்க முடியாத அளவிற்கு மாறிவிடும். தற்போது மழை நீருடன் நகராட்சி சாக்கடை கழிவு நீரும் கலந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் கழிவுநீர், மழைநீர் சேர்ந்து சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறிவிட்டது.
டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் சென்றால் வழுக்கி விழும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி துர்நாற்றமும் வீசுகிறது. எனவே இந்த சாலையில், மண் கொட்டி உயரப்படுத்த வேண்டும். சாக்கடை உள்ளிட்ட கழிவுநீர் சாலைக்கு வராமல் தடுக்க வேண்டும் என, இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

