/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆனங்கூர் ரயில்வே கேட் திடீரென மூடியதால் அவதி
/
ஆனங்கூர் ரயில்வே கேட் திடீரென மூடியதால் அவதி
ADDED : ஆக 05, 2025 01:41 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, வெப்படையில் இருந்து- திருச்செங்கோடு செல்லும் வழித்தடத்தில், ஆனங்கூர் பகுதியில் சாலையின் குறுக்கே ரயில்பாதை செல்கிறது. இந்த ரயில் பாதையை கடந்து ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதற்காக, ரயில் பாதையில் கேட் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று மதியம், திடீரென ரயில்வே கேட் அரை மணி நேரம் மூடப்பட்டதால், வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் வெயிலில் காத்திருந்து கடும் அவதிக்குள்ளாகினர்.
இதுகுறித்து ஆனங்கூர் ரயில்வே பணியாளர் கூறுகையில், 'தண்டவாளம் ஏற்றிக்கொண்டு ரயில் வந்தது. ஆனங்கூர் பகுதியில் தண்டவாளம் இறக்க ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் ரயில்வே கேட் மூடப்பட்டது. பணிகள் முடிந்தவுடன் ரயில்வே கேட் திறக்கப்பட்டது. சிக்னல் பிரச்னை எதுவும் ஏற்பட வில்லை' என்றார்.