/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அங்கன்வாடி மையத்தில் 'குடி'மகன்கள் அராஜகம்
/
அங்கன்வாடி மையத்தில் 'குடி'மகன்கள் அராஜகம்
ADDED : நவ 28, 2024 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியன், போடிநாய்க்கன்பட்டி பஞ்சாயத்தில், சில மாதங்களுக்கு முன் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு விடப்பட்டது. இதில், 20க்கும் மேற்பட்ட குழந்-தைகள் படித்து வருகின்றனர். இந்த அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால், 'குடி'மகன்களின் கூடாரமாக மாறியுள்-ளது. மது குடிக்கும் ஆசாமிகள், காலி பாட்டில்களை உடைத்து எறிந்து விட்டு
செல்கின்றனர். இதனால், அங்கன்வாடி மையத்-திற்கு வரும் குழந்தைகள், பெற்றோர் அச்சப்படும் நிலை
உள்-ளது. எனவே, அங்கன்வாடி மையத்தில், 'சிசிடிவி' கேமரா வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என,
பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.