/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அங்கன்வாடி பணியாளர் பணியிடை நீக்கம்
/
அங்கன்வாடி பணியாளர் பணியிடை நீக்கம்
ADDED : ஜூன் 12, 2025 01:36 AM
பள்ளிப்பாளையம், தார்காடு பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் சரியாக பணிக்கு வராத பணியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
பள்ளிப்பாளையம் அருகே, தார்காடு பகுதியில் செயல்படும் அங்கன்வாடி மையத்தில் சமையலர் உதவியாளராக சரஸ்வதி, 49, என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இவரை பார்க்க தேவராஜ், 60, என்பவர் அடிக்கடி அங்கன்வாடி மையத்திற்கு வந்துள்ளார். இவர் அங்குள்ள, நான்கு வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து புகார்படி, திருச்செங்கோடு மகளிர் போலீசார் விசராணை செய்து, தேவராஜ், இவருக்கு உதவியாக இருந்த சரஸ்வதி ஆகிய இருவரை கைது செய்தனர்.
மேலும், சம்பந்தப்பட்ட அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் பணியாளர் சுகுணா, பணிக்கு சரியாக வராத காரணத்தால், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.