/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எஸ்.ஐ.ஆரிலிருந்து விடுவிக்க அங்கன்வாடி ஊழியர்கள் மனு
/
எஸ்.ஐ.ஆரிலிருந்து விடுவிக்க அங்கன்வாடி ஊழியர்கள் மனு
எஸ்.ஐ.ஆரிலிருந்து விடுவிக்க அங்கன்வாடி ஊழியர்கள் மனு
எஸ்.ஐ.ஆரிலிருந்து விடுவிக்க அங்கன்வாடி ஊழியர்கள் மனு
ADDED : நவ 18, 2025 02:00 AM
நாமக்கல், 'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டும்' என, அங்கன்வாடி ஊழியர்கள், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.இதுகுறித்து, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இந்திய தேர்தல் ஆணையம், அங்கன்வாடி ஊழியர்களை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களாக நியமித்து வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியல் திருத்தப்படிவம் வினியோகிக்கும் பணியை வழங்கி உள்ளது. இப்பணியை, 10 முதல், 15 நாட்களுக்குள் முடிக்கவும் அறிவுறுத்தி உள்ளது.
ஒவ்வொருவருக்கும், 650 முதல், 1,500 வாக்காளர்கள் உள்ளனர். பணியிடத்தில் இருந்து, ஐந்து கி.மீ., தொலைவிற்கு சென்று வரவேண்டி உள்ளது. ஏற்கனவே காலியிடங்களால் கூடுதல் மையங்களை கவனித்து வரும் சூழலில், தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியில் ஈடுபட்டுள்ளதால் மிகுந்த பணி நெருக்கடி, மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறோம்.
காலை, 7:00 முதல் இரவு, 7:00 மணி வரையில் பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. விடுமுறை நாட்களிலும் இந்த பணியை மேற்கொள்ள வேண்டி உள்ளது. வரும் நாட்களிலும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளால் நெருக்கடியான சூழல் ஏற்படக்கூடும். அங்கன்வாடி குழந்தைகளின் நலனையும், பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு, எங்கள் அனைவரையும் பணியில் இருந்து
விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

