/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போலீசாரை கண்டித்து சமூக ஆர்வலர் தர்ணா
/
போலீசாரை கண்டித்து சமூக ஆர்வலர் தர்ணா
ADDED : நவ 18, 2025 02:00 AM
நாமக்கல், ராசிபுரம், கார்கூடல்பட்டி பஞ்.,க்குட்பட்ட மெட்டாலாவை சேர்ந்தவர் பாலமுருகன், 29. சமூக ஆர்வலரான இவர், நாமக்கல் கலெக்டர் அலுவலக பிரதான வாயில் முன், நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- மெட்டாலா பகுதியில், அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, தனிநபர் ஒருவர் வீடு கட்ட முயன்றார். இது தொடர்பாக, வருவாய்த்துறையினருக்கு மொபைல் போன் மூலம் தகவல் தெரிவித்தேன்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபரும், அவரது தந்தையும், என்மீது இரும்பு ராடால் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக, ஆயில்பட்டி போலீசில் புகாரளித்தேன். ஆனால், போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக என் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்வோம் என போலீசார் மிரட்டி வருகின்றனர். அதனால், ஆயில்பட்டி போலீசாரின் மெத்தன போக்கை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.
அவரை, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

