/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போராட்டத்திற்கு பின் மின் இணைப்பு வழங்கல்
/
போராட்டத்திற்கு பின் மின் இணைப்பு வழங்கல்
ADDED : நவ 18, 2025 02:00 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, எஸ்.பி.பி., காலனி பகுதியில் உள்ள மின் அலுவலகம் முன், மா.கம்யூ., கட்சியினர், தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மின் இணைப்பு கொடுக்கப்பட்டதால், காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.
இதுகுறித்து, மா.கம்யூ., கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோகன் கூறியதாவது:
ஆயக்காட்டூர், பண்ணக்காடு பகுதியில் விவசாயி தங்கராசுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் துண்டிக்கப்பட்ட விவசாய மின் இணைப்பை மீண்டும் வழங்க வேண்டும் எனக்கோரி, மா.கம்யூ., கட்சி சார்பில், பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் மின் இணைப்பு தரும் வரை, நேற்று காலை முதல், எஸ்.பி.பி., காலனி பகுதியில் மின் அலுவலகம் முன் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். மாலை, 3:00 மணிக்கு மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பு கொடுத்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.

