/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கார்த்திகை முதல் நாள் துவக்கம் விரதம் துவங்கிய ஐயப்ப பக்தர்கள்
/
கார்த்திகை முதல் நாள் துவக்கம் விரதம் துவங்கிய ஐயப்ப பக்தர்கள்
கார்த்திகை முதல் நாள் துவக்கம் விரதம் துவங்கிய ஐயப்ப பக்தர்கள்
கார்த்திகை முதல் நாள் துவக்கம் விரதம் துவங்கிய ஐயப்ப பக்தர்கள்
ADDED : நவ 18, 2025 01:42 AM
நாமக்கல், கார்த்திகை மாதம் துவங்கியதால், நாமக்கல் ஐயப்பன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குருசாமி முன்னிலையில் மாலை அணிந்து விரதத்தை துவக்கினர்.
தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதத்திற்கு தனி சிறப்பு உண்டு. கார்த்திகை தொடங்கிய நாள் முதல் பெண்கள் தங்களது இல்லத்தில் அகல் விளக்குகளை ஏற்றி வைப்பது உள்ளிட்ட பல்வேறு தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வர். இதேபோல், ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை, 1ல் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வங்களை வணங்கி, குருசாமி முன்னிலையில் மாலை அணிந்து விரதத்தை துவங்குவது வழக்கம்.
அதன்படி, நாமக்கல்--மோகனுார் சாலையில் உள்ள ஐயப்பன் கோவிலில், நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. காலை, 5:00 மணி முதல், 2,000க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் என ஏராளமானோர் சரண கோஷங்களை எழுப்பி, குருசாமியிடம் மாலை அணிந்து விரதத்தை துவங்கினர்.