/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாக்கு ஏலம்
/
நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாக்கு ஏலம்
நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாக்கு ஏலம்
நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாக்கு ஏலம்
ADDED : நவ 18, 2025 01:42 AM
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை-ஆத்துார் பிரதான சாலையில், ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இதில், ஏற்கனவே மஞ்சள், மக்காச்சோளம், தேங்காய் பருப்பு உள்ளிட்ட வேளாண் விளைபொருட்கள் ஏலம் விடப்பட்டு வருகிறது. கமிஷன் இன்றி விவசாயிகள் நேரடியாக தங்களது விளை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
அதேபோல், நாடு முழுவதும் உள்ளூர் வேளாண் பொருட்களை விற்க வசதியாக, 'இ.நாம்' முறையில் ஆன்லைன் டெண்டர் நடத்து வசதியும் உள்ளது. இந்நிலையில், நாமகிரிப்பேட்டையில் முதல் முறையாக ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாக்கு ஏலம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின், நாமக்கல் விற்பனைக்குழு சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நாளை முதல் பாக்கு ஏலம் நடக்கவுள்ளது. ஏலத்திற்கு பாக்கு பழம், காய்ந்த பாக்கு காய், சாலி பாக்கு, ஆப்பி பாக்கு ஆகியவற்றை கொண்டு வரலாம். வாரந்தோறும் புதன் கிழமை பாக்கு ஏலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விபரங்களுக்கு, 9159356156, 7708808154 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

