/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 13, 2024 06:55 AM
நாமக்கல்: பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், மாநில அளவில் வட்டாரம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில், 16 வட்டாரங்களில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் மலர்கொடி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரேமா முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் வேலுசாமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.இதில், அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து மாத ஊதியமாக, 26 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். உதவியாளர்களுக்கு, 21 ஆயிரம் வழங்க வேண்டும்.
குறைந்தபட்ச ஓய்வூதியமாக, 9,000 ரூபாய் வழங்க வேண்டும். மே மாதம் விடுமுறை வழங்க வேண்டும். அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு ஓராண்டு வழங்குவதுபோல, அங்கன்வாடி ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.