/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வரும் 12ல் அனிச்சம்பாளையம் மாரியம்மன் கும்பாபிஷேக விழா
/
வரும் 12ல் அனிச்சம்பாளையம் மாரியம்மன் கும்பாபிஷேக விழா
வரும் 12ல் அனிச்சம்பாளையம் மாரியம்மன் கும்பாபிஷேக விழா
வரும் 12ல் அனிச்சம்பாளையம் மாரியம்மன் கும்பாபிஷேக விழா
ADDED : டிச 06, 2024 07:35 AM
ப.வேலுார்: -நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே, அனிச்சம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு கும்பாபிஷேகம் நடத்த ஊர் பொதுமக்கள் முடிவெடுத்தனர். இதையடுத்து, கடந்த ஓராண்டாக கோவில் திருப்பணி வேலை நடந்து வந்தது. தற்போது பணிகள் முடிந்து வரும், 12ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதை முன்னிட்டு வரும், 10ம் தேதி காலை, 6:00 மணிக்கு மங்கள கணபதி யாகத்துடன் விழா தொடங்குகிறது. இரவு, 7:00 மணிக்கு கலசம் வைத்தல், புதிய சிலைகளுக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. 11 காலை, 7:00 மணிக்கு காவேரி ஆற்றுக்கு சென்று புனித நீர் கொண்டு வருதல் நிகழ்ச்சி, மாலை, 5:00 மணிக்கு யாகசாலை பிரவேசம், முதற்கால யாக பூஜை வழிபாடு நடக்கிறது. வரும், 12 அதிகாலை 4:00 மணிக்கு இரண்டாம் கால நாக வழிபாடு பூஜை, கலச வழிபாடு மகா தீபாராதனை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக காலை, 8:00 மணிக்கு விநாயகர், மகாமாரியம்மன் சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.