/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அண்ணாதுரை பிறந்தநாள் சைக்கிள் போட்டி
/
அண்ணாதுரை பிறந்தநாள் சைக்கிள் போட்டி
ADDED : செப் 28, 2025 01:54 AM
நாமக்கல்:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், நாமக்கல்லில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாள் சைக்கிள் போட்டி நடந்தது. மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன், நேற்று காலை தொடங்கியது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 13 வயதிற்குட்பட்டோர், 15 கி.மீ., 10 கி.மீ., 15 வயதிற்குட்பட்டோர், 20 கி.மீ., 15 கி.மீ., 17 வயதிற்குட்பட்டோர், 20 கி.மீ., 15 கி.மீ., தொலைவுக்கு சென்று வந்தனர்.
இதில், 13 வயது ஆடவர் பிரிவில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர் கேசவன், பெண்கள் பிரிவில் ஜாரு, 15 வயது ஆடவர் பிரிவில், செவந்திப்பட்டி அரசுப்பள்ளி மாணவர் சர்வின், பெண்கள் பிரிவில் ரெட்டிப்பட்டி பாரதி பள்ளி மாணவி அனுஸ்ரீ, 17 வயது ஆடவர் பிரிவில் செவந்திப்பட்டி அரசுப்பள்ளி மாணவர் ஹரிஹரன், பெண்கள் பிரிவில் நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி பிருந்தா ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற மாணவ, -மாணவிகளுக்கு முதல் பரிசாக, 5,000- ரூபாயும், இரண்டாம் பரிசாக, 3,000- ரூபாயும், மூன்றாம் பரிசாக, -2,000 ரூபாய் வீதம் வழங்கப்பட்டது. மேலும்-, 4 முதல், 10 இடங்களில் வருவோருக்கு,- 250 ரூபாய்க்கான காசோலைகளும், தகுதி சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.