sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

'நம்ம ஊரு மோடி பொங்கல்' விழா பொறுப்பாளர்கள் அறிவிப்பு

/

'நம்ம ஊரு மோடி பொங்கல்' விழா பொறுப்பாளர்கள் அறிவிப்பு

'நம்ம ஊரு மோடி பொங்கல்' விழா பொறுப்பாளர்கள் அறிவிப்பு

'நம்ம ஊரு மோடி பொங்கல்' விழா பொறுப்பாளர்கள் அறிவிப்பு


ADDED : டிச 30, 2025 05:08 AM

Google News

ADDED : டிச 30, 2025 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பா.ஜ., சார்பில், 'நம்ம ஊரு மோடி பொங்கல்' என்ற தலைப்பில் ஆண்டுதோறும் விழா கொண்டாடப்-பட்டு வருகிறது. 2026ம் ஆண்டிற்கான பொங்கல் விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து, கட்சியி-னருக்கு குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

2026 ஜன., 4, 5, 6, 7ல் மண்டல வாரியாக, 'நம்ம ஊரு மோடி பொங்கல்' நிகழ்ச்சியை பொதுமக்க-ளோடு இணைந்து நடத்த வேண்டும். கட்சியின் மகளிர் அணி, விவசாய அணி, விளையாட்டு மற்றும் கலை கலாச்சார பிரிவு ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டும். ஒவ்வொரு மண்டலத்துக்கும் மண்டல தலை-வரின் கீழ், 3 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும்.ஆயிரக்கணக்கான மகளிரை ஒன்றிணைத்து, மண்டலத்தில் ஒரே இடத்தில் வைத்து பொங்கல் விழாவை மிக சிறப்பாக கொண்டாட திட்டமிட வேண்டும். ஜல்லிக்கட்டு, சிலம்பம், மஞ்சுவிரட்டு, கிராமிய நடனங்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் போன்றவற்றை நடத்-தலாம். முன்னாள் மற்றும் இந்நாள் பொறுப்பா-ளர்களை குடும்பத்துடன் கலந்து கொள்ள செய்ய வேண்டும். பொங்கல் நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில் உறுப்பினர் சேர்க்கைக்கான ஏற்பாடு-களையும் செய்ய வேண்டும். நிகழ்ச்சி குறித்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதி-வேற்றி, மாநில தலைமைக்கும் அனுப்ப வேண்டும் என, தெரிவித்துள்ளனர். இந்நி-லையில், ராசிபுரம் ஒன்றியத்திற்கு சரவணன், சேகர், மோகன், ராசிபுரம் நகர் பகுதிக்கு வெங்க-டேசன், லோகநாதன், ராஜா, நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றியத்திற்கு ஜெயராமன், சக்திவேல், கார்த்திகேயன், மேற்கு ஒன்றியத்திற்கு அருள்-குமார், ராஜா, ஜெயபால் ஆகியோர் பொறுப்பாளர்-களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us