/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதங்கள் ஆண்டு தணிக்கை
/
ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதங்கள் ஆண்டு தணிக்கை
ADDED : செப் 21, 2024 02:56 AM
நாமக்கல்: மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், போலீஸ், வனத்துறை, சப் ஜெயிலுக்குட்பட்ட, 385 ஆயுதங்கள் ஆண்டு தணிக்கை மேற்-கொள்ளப்பட்டன.
நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை, போலீஸ் ஸ்டேஷன், வனத்-துறை மற்றும் சப் ஜெயில்கள் ஆகியவற்றில், பல்வேறு பணிக-ளுக்காக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த ஆயு-தங்கள், நல்ல நிலையில் உள்ளதா, பழுதடைந்துள்ளதா என்பது குறித்து, ஆண்டுதோறும் தணிக்கை செய்யப்படுகிறது. அதன்படி, நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், ஆயுதங்கள் ஆண்டு தணிக்கை, நேற்று மேற்கொள்ளப்பட்டது. சென்னை ஆவடி துணை தலவாய் சிறுபடை கலன் கூடுதல் எஸ்.பி., கோவிந்தராஜ் தலைமையில், எஸ்.ஐ., முனியாண்டி, தலைமை காவலர் சுரேஷ்குமார் ஆகியோர், தணிக்கையில் ஈடுபட்டனர். நாமக்கல் ஆயுதப்படை
டி.எஸ்.பி., இளங்கோ முன்னிலையில் நடந்த இந்த தணிக்கையில், ஆயுதங்கள் வகையறாக்கள், அவை நல்ல நிலையில் உள்ளதா?
பழுதடைந்துள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மொத்தம், 385 ஆயுதங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
மாவட்டம் முழுதும், 1,500 ஆயுதங்கள் உள்-ளன என்பது குறிப்பிடத்தக்கது.