/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாய் தபோவனத்தில் வருஷாபிேஷக விழா
/
சாய் தபோவனத்தில் வருஷாபிேஷக விழா
ADDED : ஆக 28, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல், தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில் வருஷாபிேஷக விழா கோலாகலமாக நடந்தது.
நாமக்கல்-பரமத்தி சாலை, வள்ளிபுரம் அடுத்த தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில், நேற்று நடந்த 11 ம் ஆண்டு வருஷாபிேஷக விழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 4:15 மணிக்கு காலை ஆரத்தியுடன் விழா துவங்கியது.
5:00 மணிக்கு ேஹாமம், 6:00 மணிக்கு கலச அபிேஷகம், மங்கள ஸ்நானம் நடந்தது. 7:00 மணிக்கு சங்கல்ப பூஜையும், 8:15 மணிக்கு கூட்டுப் பிரார்த்தனை, மஹா நைவேத்தியம், ஆரத்தி நடந்தது. தொடர்ந்து காலை, 8:30 மணி முதல் மதியம், 3:00 மணி வரை அன்னதானம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு இரவு ஆரத்தி நடந்தது.