/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எஸ்.வாழவந்தி அரசு பள்ளியில் ஆண்டு விழா
/
எஸ்.வாழவந்தி அரசு பள்ளியில் ஆண்டு விழா
ADDED : மார் 05, 2024 12:06 PM
மோகனுார்: மோகனுார் தாலுகா, எஸ்.வாழவந்தி பஞ்., துவக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. உயர்நிலைப்பள்ளி தலைமையாகசிரியர் முத்துக்குமார் தலைமை வகித்தார். துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் பெரியசாமி வரவேற்றார். பள்ளி மேலாண் குழு தலைவர்கள் சித்ரா, மோகனப்பிரியா, பி.டி.ஏ., தலைவர்கள் மதுரவீரன், ரஞ்சித்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாமக்கல் கிரீன் பார்க் கல்வி நிறுவனங்களின் இயக்குனர் குருவாயூரப்பன், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், பள்ளியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவியருக்கும், விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசு வழங்கி பாராட்டினார்.முன்னதாக, மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. முன்னாள் பஞ்., தலைவர் அன்புசெழியன், முன்னாள் பி.ஏ.சி.பி., தலைவர்கள் பழனிசாமி, பாலசுப்ரமணி, வங்கி பேரவை உறுப்பினர் ரவிச்சந்திரன், பள்ளி புரவலர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

