/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இந்தியா வெல்ல வேண்டும் என்ற கருத்துடன் உள்ள கட்சி எங்கள் கூட்டணிக்கு வரலாம்'
/
இந்தியா வெல்ல வேண்டும் என்ற கருத்துடன் உள்ள கட்சி எங்கள் கூட்டணிக்கு வரலாம்'
இந்தியா வெல்ல வேண்டும் என்ற கருத்துடன் உள்ள கட்சி எங்கள் கூட்டணிக்கு வரலாம்'
இந்தியா வெல்ல வேண்டும் என்ற கருத்துடன் உள்ள கட்சி எங்கள் கூட்டணிக்கு வரலாம்'
ADDED : மே 16, 2025 01:55 AM
நாமக்கல்,''வரும், 2026 சட்டசபை தேர்தலில், தமிழகத்தின் முதல் அணி என்பது, அ.தி.மு.க., பா.ஜ.,வுடன், த.மா.கா., உள்ளது. இந்தியா வெல்ல வேண்டும் என்ற ஒத்த கருத்துடன் உள்ள கட்சியினர், எங்கள் கூட்டணிக்கு வரலாம்,'' என, த.மா.கா., தலைவர் வாசன் கூறினார்.
த.மா.கா., ஒருங்கிணைப்பாளரும், நாமக்கல் நகராட்சி முன்னாள் சேர்மனுமான மணியன் கடந்த மாதம், 23ம் தேதி உடல்நல குறைவால் இறந்தார். நேற்று நாமக்கல் காந்திநகரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்த, த.மா.கா., தலைவர் வாசன், மணியன் உருவ
படத்திற்கு மலர்துாவி அஞ்சலி செலுத்தினார். பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
வளர்ச்சியில் அக்கறை கொண்ட அரசாக, தமிழகம் செயல்படவில்லை. மாறாக மத்திய அரசுடன் மோதல் போக்கை ஏற்படுத்தி கொண்டு, ஓட்டு வங்கி அரசியல் செய்வது வருத்தமான செய்தி. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த நிலையில் உள்ளது. டாஸ்மாக், போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து கொண்டே இருப்பதால், கொலை, கொள்ளைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இவ்வாறு கூறினார்.
சென்னை செல்வதற்கு, நேற்று மாலை சேலம் விமான நிலையம் வந்த வாசன் நிருபர்களிடம் கூறியதாவது: பயங்கரவாதிகளுக்கு எதிராக நடந்த, 'ஆப்பரேஷன் சிந்துார்' வெற்றியால், 140 கோடி இந்தியர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு மூலம், இந்திய மக்களுக்கு, இனி வரும் காலம் நல்ல காலமாக அமையும். வளர்ச்சி அடைந்த நாடாக இருக்கும் என்பதை, சிந்துார் வெற்றி காட்டுகிறது. இந்தியா வல்லரசாக மாறும் நேரம் நெருங்கிவிட்டதால் அதை பொறுத்துக்கொள்ள முடியாமல், டிரம்ப் பேசி வருகிறார். வரும், 2026 சட்டசபை தேர்தலில், தமிழகத்தின் முதல் அணி என்பது, அ.தி.மு.க., பா.ஜ.,வுடன், த.மா.கா., உள்ளது. இந்தியா வெல்ல வேண்டும் என்ற ஒத்த கருத்துடன் உள்ள கட்சியினர், எங்கள் கூட்டணிக்கு வரலாம். விரைவில் பல கட்சிகள் வரவுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.