/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சேந்தமங்கலம் அரசு ஐ.டி.ஐ.,யில் படிக்க நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பம் வரவேற்பு
/
சேந்தமங்கலம் அரசு ஐ.டி.ஐ.,யில் படிக்க நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பம் வரவேற்பு
சேந்தமங்கலம் அரசு ஐ.டி.ஐ.,யில் படிக்க நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பம் வரவேற்பு
சேந்தமங்கலம் அரசு ஐ.டி.ஐ.,யில் படிக்க நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : டிச 16, 2024 03:10 AM
நாமக்கல்: 'சேந்தமங்கலத்தில் துவங்கப்பட்டுள்ள அரசு ஐ.டி.ஐ.,யில் நேரடி சேர்க்கைக்கு மாணவ, மாணவியரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்-துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ், சேந்தமங்கலம் தாலுகாவில், புதிதாக அரசு தொழிற்பயிற்சி நிலையம் (ஐ.டி.ஐ.,) துவங்கி உள்ளது. அதில், தற்போது, டெக்ஸ்டைல் மெக்கட்ரானிக்ஸ், மெக்கானிக் எலக்ட்ரிக் வைகிள், சென்ட்ரல் ஏர் கண்டிசன் பிளான்ட் மெக்கானிக் ஆகிய, இரண்டு ஆண்டு கால தொழிற்பிரிவுகளும், ஹெல்த் சேனிடரி இன்ஸ்-பெக்டர் என்ற ஓராண்டு கால தொழிற்பிரிவும் தொடங்கப்பட்டு, மாநில தொழில் குழும கல்வி முறையில், 2024-25ம் ஆண்டிற்-கான நேரடி மாணவர் சேர்க்கை வரும், 31 வரை நடக்கிறது.
இப்பயிற்சிக்கு, பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி பெற்ற பெண் ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு குறைந்தபட்சம், 14 முதல், 40 வயது. மகளிருக்கு உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை. விண்ணப்ப கட்டணம், 50 ரூபாய் மற்றும் சேர்க்கை கட்டணம், 195 ரூபாய் சேர்க்கையின்போது நேரடியாக செலுத்தவேண்டும். அரசு தொழிற்பயிற்சி நிலையங்-களில் பயிலும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி காலத்தின்போது, மாதம், 750 ரூபாய் கல்விக்கட்டணம், விலையில்லா சீருடை, பாடப்புத்தகம், வரைபடக்கருவிகள், சைக்கிள், புதுமை பெண், தமிழ்புதல்வன்
திட்டத்தின் கீழ் உதவித்தொகை உள்ளிட்ட அரசு சலுகைகள் வழங்கப்படும்.
இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று தகுதியுள்ள மாணவ, மாணவியர் கலெக்டர் அலுவல-கத்தில் உள்ள, 'உதவி இயக்குனர், மாவட்ட திறன் பயிற்சி அலு-வலக அறை எண், 304-ல் அமைந்துள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையம் நேரடி சேர்க்கை உதவி மையத்திற்கு, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், இறுதியாக பெற்ற மாற்று சான்றிதழ், ஜாதி சான்று ஆகிய அசல் சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டையுடன் நேரில் சென்று விண்ணப்-பித்து பயன்பெறலாம். விபரங்களுக்கு, 04286-290297, 9499055842, 9487745094 ஆகிய தொலைபேசி, மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.