/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு மருத்துவ கல்லுாரியில் காலியாக உள்ள பாடப்பிரிவுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
/
அரசு மருத்துவ கல்லுாரியில் காலியாக உள்ள பாடப்பிரிவுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
அரசு மருத்துவ கல்லுாரியில் காலியாக உள்ள பாடப்பிரிவுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
அரசு மருத்துவ கல்லுாரியில் காலியாக உள்ள பாடப்பிரிவுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : செப் 06, 2025 01:26 AM
நாமக்கல் :'அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் காலியாக உள்ள சான்றிதழ் பாடப்பிரிவுகளில், மாவட்ட அளவிலான சேர்க்கைக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது' என, கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நடப்பு, 2025--26ம் கல்வியாண்டிற்கான, நாமக்கல் மாவட்டத்தில், அரசு மருத்துவ கல்லுாரியில், காலியாக உள்ள மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில், மாவட்ட அளவிலான சேர்க்கை கலந்தாய்வு மூலம் விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
ஓராண்டு சான்றிதழ் பயிற்சியான, எமர்ஜென்சி கேர் டெக்னீசியன், அனஸ்தீசியா டெக்னீசியன், தியேட்டர் டெக்னீசியன், ஆர்த்தோபேட்டீக் டெக்னீசியன், மல்டி பர்பஸ் ஹாஸ்பிடல் ஒர்க்கர் ஆகிய சான்றிதழ் படிப்புகளுக்கு, மொத்தம், 56 இடங்கள் காலியாக உள்ளன.
காலியிடங்கள் தொடர்பான விபரங்கள், www.gmcnkl.tn.gov.in என்ற வலைதளத்திலும், நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரியின் அறிவிப்பு பலகையிலும் அறிந்துகொள்ளலாம். விண்ணப்பதாரர், வரும் டிச., 31ல், 17 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு, மேல்நிலை பள்ளி படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சேர்க்கையில், மாற்றுத்திறனாளிகளுக்கான, ஐந்து சதவீதம் இடஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும், 12 அல்லது அதற்கு முன், நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர், துணை முதல்வர் அலுவலகத்தில் நேரடியாக அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.