/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் மாவட்டத்துக்கு கல்வி அலுவலர்கள் நியமனம்
/
நாமக்கல் மாவட்டத்துக்கு கல்வி அலுவலர்கள் நியமனம்
ADDED : அக் 11, 2024 01:10 AM
நாமக்கல் மாவட்டத்துக்கு
கல்வி அலுவலர்கள் நியமனம்
நாமக்கல், அக். 11-
நாமக்கல் மாவட்டத்திற்கு, மூன்று கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில், நாமக்கல் மாவட்டத்திற்கு கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதில், சேலம் மாவட்டம், டி. பெருமாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதி, மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்). தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரயர் கற்பகம், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை கல்வி). சேலம் மாவட்டம், சித்தேரி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பச்சமுத்து, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.