ADDED : ஜூன் 01, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம், ராசிபுரம் அருகே, கூனவேலம்பட்டி புதுார் அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கலியபெருமாள், ஆசிரியை வரலட்சுமி ஆகியோர் பணி நிறைவு பெற்றனர். இவர்களுக்கான பாராட்டு விழா, பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நேற்று நடந்தது.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சரவணன் தலைைமை வகித்து பேசினார். பொருளாளர் பூபதி, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஹரிஹரன், மணிவண்ணன், பச்சமுத்து, பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்களை பாராட்டினர். முன்னதாக, தலைமை ஆசிரியர், ஆசிரியைக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.