/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரளி பூக்கள் கிலோ ரூ.350க்கு விற்பனை
/
அரளி பூக்கள் கிலோ ரூ.350க்கு விற்பனை
ADDED : ஆக 16, 2024 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே கொல்லிமலை அடிவாரத்தில் காரவள்ளி, இராமநாதம்புதுார், வெட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் அரளி பூக்கள் பயிரிடப்பட்டுள்ளது.
திருவிழா நாட்களில் இந்த பகுதியில் இருந்து, வெளி மாவட்டங்களுக்கு அரளி பூக்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதத்தையொட்டி, சேந்தமங்கலம் பகுதியில் இருந்து நேற்று, ஐந்து டன் அரளி பூக்கள் நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் நடக்கும் பூ மார்க்கெட்டிற்கு அனுப்பப்பட்டது. சாதாரண நாட்களில் கிலோ 150க்கு விற்ற அரளி பூக்கள் நேற்று, 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.