/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஓரின சேர்க்கையின்போது தகராறு:ஒருவர் கைது; சிறுவர்களுக்கு வலை
/
ஓரின சேர்க்கையின்போது தகராறு:ஒருவர் கைது; சிறுவர்களுக்கு வலை
ஓரின சேர்க்கையின்போது தகராறு:ஒருவர் கைது; சிறுவர்களுக்கு வலை
ஓரின சேர்க்கையின்போது தகராறு:ஒருவர் கைது; சிறுவர்களுக்கு வலை
ADDED : செப் 15, 2025 01:38 AM
ப.வேலுார்:ப.வேலுார் அருகே, ஓரின சேர்க்கையாளர்களிடையே நடந்த மோதலில் ஒருவரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள, இரண்டு சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே, கொட்டாம்பட்டிடய சேர்ந்தவர் ராமசாமி, 49; விவசாயி. இவருக்கும், எருமப்பட்டியை சேர்ந்த, 17 வயது சிறுவனுக்கும், போன் மூலம் நட்பு ஏற்பட்டது. நட்பாக பழகி வந்த இவர்கள், ஓரின சேர்க்கையாளர்களாக மாறினர். நேற்று முன்தினம் இரவு, எருமப்பட்டியை சேர்ந்த ஹரிஷ், 19, மற்றும் இரண்டு சிறுவர்கள் என, மூவரும் ராமசாமி வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு, காட்டுப்பகுதியில், நான்கு பேரும் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது ஏற்பட்ட தகராறில் மூவரும் சேர்ந்து ராமசாமியை தாக்கியுள்ளனர். மேலும், ராமசாமி வைத்திருந்த, 500 ரூபாய் மற்றும் அவரது மொபைல் போனை பறித்துக்கொண்டனர். வலி தாங்க முடியாமல் அலறிய ராமசாமியின் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர். இதையறிந்த மூவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். அவர்களை தேடியபோது, வேலகவுண்டம்பட்டி அருகே, புத்துார் ரோடு பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த ஹரிஷை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். வழக்குப்பதிவு செய்த வேலகவுண்டம்பட்டி போலீசார், தலைமறைவாக உள்ள, இரண்டு சிறுவர்களை தேடி வருகின்றனர்.