/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தரிசு நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க ஏற்பாடு
/
தரிசு நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க ஏற்பாடு
ADDED : ஜூலை 18, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமகிரிப்பேட்டை, 'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் தரிசு நிலத்தில், ஆழ்துளை கிணறு அமைத்து தரப்படும்' என, வேளாண்மை உதவி பொறியாளர் பிரவின்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளின் தரிசு நிலத்தில், அரசு மானியத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து மின்கட்டமைப்பு வசதி செய்து தரப்படும். விருப்பம் உள்ளவர்கள், நாமகிரிப்பேட்டை வேளாண்மை பொறியியல் துறையை அணுகலாம். அல்லது, 9789532100 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.