/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பவானி டி.எஸ்.பி.,க்கு பிடிவாரன்ட்
/
பவானி டி.எஸ்.பி.,க்கு பிடிவாரன்ட்
ADDED : செப் 05, 2025 01:19 AM
நாமக்கல், நாமக்கல் நீதிமன்றத்தில், பவானி டி.எஸ்.பி.,க்கு வாரன்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லை சேர்ந்தவர் காதர்பாஷா. இவர், 2019 ஜூன், 4-ம் தேதி தனியார் பஸ் ஒன்றில் முன்பக்க படிக்கட்டில் நின்று பயணம் செய்தார். புதன்சந்தை மேம்பாலத்தில் சென்றபோது, டிரைவர் பிரேக் பிடித்துள்ளார். இதில் காதர்பாஷா கீழே விழுந்து இறந்தார்.
நல்லிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில், அப்போது இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ரத்தினகுமார் வழக்குப்பதிவு செய்தார். இந்த விசாரணை, நாமக்கல் முதலாவது குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதில் சாட்சி சொல்ல, தற்போது ஈரோடு மாவட்டம், பவானியில் டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வரும் ரத்தினகுமாருக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. அவர் வாங்க மறுத்து விட்டதாக தெரிகிறது.
இதை தொடர்ந்து நீதிபதி செகனாபானு, அவருக்கு சாட்சி வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். வழக்கு விசாரணை வரும், 17ம் தேதிக்கு
ஒத்திவைக்கப்பட்டது.