/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கே.எஸ்.ஆர்., கல்லுாரியில் ஓணம் திருவிழா
/
கே.எஸ்.ஆர்., கல்லுாரியில் ஓணம் திருவிழா
ADDED : செப் 05, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்செங்கோடு, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவனத்தில், ஓணம் திருவிழா கொண்டாடப்பட்டது.
கல்லுாரி மாணவ,- மாணவிகள் கேரள பாரம்பரிய உடை அணிந்தும், அத்தப்பூ கோலமிட்டும், ஓணம் பண்டிகையை வரவேற்று கொண்டாடினர். ஓணம் திருவிழா கொண்டாட்டத்தை கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவனங்களின் சேர்மன் சீனிவாசன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் மோகன் முன்னிலை
வகித்தார்.
சிறப்பாளர்களாக திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் சண்முகராஜா, நடிகர் ராஜு ஜெயமோகன், திரைப்பட நடிகை மிருணாலினி ரவி, வீடியோ ஜாக்கிகள் தியா, தீபிகா, சுந்தர்ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுடன் நடனம் ஆடி
கொண்டாடினர்.