/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பஞ்சாப்பில் இருந்து நாமக்கல்லுக்கு 2,700 டன் கோதுமை வரவழைப்பு
/
பஞ்சாப்பில் இருந்து நாமக்கல்லுக்கு 2,700 டன் கோதுமை வரவழைப்பு
பஞ்சாப்பில் இருந்து நாமக்கல்லுக்கு 2,700 டன் கோதுமை வரவழைப்பு
பஞ்சாப்பில் இருந்து நாமக்கல்லுக்கு 2,700 டன் கோதுமை வரவழைப்பு
ADDED : மே 29, 2024 07:30 AM
நாமக்கல் : பஞ்சாப் மாநிலத்தில் இருந்து, 2,700 டன் கோதுமை, நாமக்கல்லுக்கு சரக்கு ரயில் மூலம் வரவழைக்கப்பட்டது.
நாமக்கல் பகுதியில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு தேவையான கோதுமை, அரிசி, சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்களும், கோழித்தீவனத்திற்கு தேவையான மக்காச்சோளம், கடுகு புண்ணாக்கு, சோயா உள்ளிட்ட மூலப்பொருட்களும் பெரும்பாலும் வடமாநிலத்தில் இருந்து வாங்கி வரப்படும். அந்தவகையில் நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு தேவையான கோதுமை, பஞ்சாப் மாநிலம் டென்டா, ஒசிகாரா ஆகிய பகுதியில் இருந்து, 2,700 டன் வாங்கி அங்கிருந்து, 42 வேகன் கொண்ட சரக்கு ரயில் மூலம் நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்டு, அங்கிருந்து லாரிகளில் ஏற்றி, நல்லிப்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு உணவுப்பொருள் வாணிப கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.