ADDED : நவ 07, 2024 01:28 AM
வட்டார அளவில் கலைத்திருவிழா
நாமக்கல், நவ. 7-
நாமக்கல் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள மையம் சார்பில், வட்டார அளவிலான மாணவ, மாணவியர் பங்கேற்ற கலைத்திருவிழா போட்டி, நேற்று நடந்தது.
நாமக்கல் வட்டாரத்திற்கு உள்பட்ட அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கான கலைத்திருவிழா போட்டி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் வட்டார வளமையத்தில் நடந்தது. இப்போட்டிகளை, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சசிராணி தொடக்கி வைத்தார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன் சிறப்புரையாற்றினார்.
இதில், 66 பள்ளிகளில் இருந்து, 1 முதல் 5ம்- வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு ஆத்திச்சூடி ஒப்புவித்தல், பேச்சுப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், ஆங்கில பாட்டு பாடுதல், மாறுவேட போட்டி, வண்ணம் தீட்டுதல் மற்றும் கதை கூறுதல், களிமண் பொம்மைகள், பாரதநாட்டியம் குழு, நாட்டுப்புற நடனம் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. அனைத்து போட்டிகளிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர்கள், மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் பங்குபெறுவர்.
இப்போட்டிக்கான ஏற்பாடுகளை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிந்துஜா, ஆசிரியர் பயிற்றுனர்கள் கவிதா, ரவிக்குமார், கோகிலா, கோமதி மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் செய்திருந்தனர்.