/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு அர்த்தனாரீஸ்வரர் அலங்காரம்
/
நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு அர்த்தனாரீஸ்வரர் அலங்காரம்
நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு அர்த்தனாரீஸ்வரர் அலங்காரம்
நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு அர்த்தனாரீஸ்வரர் அலங்காரம்
ADDED : டிச 15, 2024 03:07 AM
ராசிபுரம்: ராசிபுரத்தில் வரலாற்று சிறப்பு மிக்க நித்திய சுமங்கலி மாரி-யம்மன் கோவில் உள்ளது. ஆடி வெள்ளி, அமாவாசை, பவுர்-ணமி உள்ளிட்ட தினங்களில் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி, அம்ம-னுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
நேற்று முன்தினம் இரவு, 108 கலச பூஜை நடந்தது. மழை வளம், கல்வி வளம் பெற, விவசாயம் செழிக்கவும், திருமண பாக்கியம், நவக்கிரகங்களின் நன்மை பெற, செல்வ வளம் பெறுவதற்கு, ஆயுள் பலம், நாகதோஷம் நீங்க என பல்வேறு நன்மைகள் வேண்டி நடந்த இந்த சிறப்பு பூஜையில், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.முன்னதாக, கணபதி ஹோமமும், மாரியம்மனுக்கு அபிஷே-கமும் நடந்தது. அம்மன் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். நேற்று காலை வரை பக்தர்கள் கோவிலுக்கு அதிகளவு வந்தனர். கோவில் தலைமை பூசாரிகள் செல்வம், ரவி ஆகியோர் அலங்காரம் செய்திருந்தனர்.