/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தேவாலயங்களில் சாம்பல் புதன் வழிபாடு
/
தேவாலயங்களில் சாம்பல் புதன் வழிபாடு
ADDED : பிப் 15, 2024 12:18 PM
நாமக்கல்: கிறிஸ்தவர்களின், 40 நாள் தவக்காலம், நேற்று துவங்கியதை அடுத்து, தமிழகம் முழுதும் உள்ள தேவாலயங்களில், சாம்பல் புதன் பிரார்த்தனையில் கிறிஸ்தவர்கள் ஈடுபட்டனர்.
இயேசு கிறிஸ்து, வனாந்தரத்தில் நோன்பு இருந்த, 40 நாட்களை நினைவு கூர்ந்து, கிறிஸ்தவர்கள் உபவாசம் இருந்து ஜெபிப்பார்கள். இது தவக்காலம், தபசு காலம், இலையுதிர் காலம் என, அழைக்கப்படுகிறது. தவக்காலத்தின் முதல் நாளான சாம்பல் புதன், நேற்று அனுசரிக்கப்பட்டது.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களில், நேற்று காலை, சிறப்பு பிரார்த்தனை நடந்தது. நாமக்கல் கிறிஸ்து அரசர் ஆலயத்தில், பங்கு தந்தையும், நாமக்கல் வட்டார முதன்மை குருவுமான தாமஸ் மாணிக்கம் தலைமையில், சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அதில், அருட்தந்தைகள் ஜெயராஜ், டேன்சன் மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இதேபோல், மோகனுார் அடுத்த ஆர்.சி.பேட்டப்பாளையத்தில் உள்ள புனித செசிலீ ஆலயத்தில், பங்கு தந்தை ஜான்போஸ்கோ தலைமையில், சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து, 6 வெள்ளிக்
கிழமை சிறப்பு வழிபாடு நடக்கிறது. ஈஸ்டர் பண்டிகை, வரும், மார்ச், 31-ல் கொண்டாடப்படுகிறது.

