sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஜேடர்பாளையத்தை கிராம பஞ்., ஆக மாற்றக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

/

ஜேடர்பாளையத்தை கிராம பஞ்., ஆக மாற்றக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஜேடர்பாளையத்தை கிராம பஞ்., ஆக மாற்றக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஜேடர்பாளையத்தை கிராம பஞ்., ஆக மாற்றக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 06, 2025 02:04 AM

Google News

ADDED : ஜன 06, 2025 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: ப.வேலுார் அருகே, வடகரையாத்துார் கிராம பஞ்சாயத்து உள்-ளது.

பள்ளபாளையம், மாரியம்மன் படுகை, மணல்மேடு, புதுப்-பாளையம், தொட்டிபாளையம், கரசப்பாளையம், காளிபா-ளையம் கண்டிபாளையம், ஜேடர்பாளையம் ஆகிய கிராமங்-களை உள்ளடக்கி, பெரிய கிராம பஞ்சாயத்தாக வடகரையாத்துார் உள்ளது. இதில் முக்கிய பகுதியாக, ஜேடர்பாளையம் விளங்குகி-றது. ஜேடர்பாளையத்தில் அணைக்கட்டு மற்றும் அண்ணா பூங்கா சுற்றுலாத்தலமாக திகழ்கிறது. மேலும் அரசு மருத்துவமனை, பரிசல் துறை, அரசு வங்கி, அரசு பள்ளி, போலீஸ் ஸ்டேஷன், நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், சேலம் மாவட்ட மத்திய கூட்டு-றவு வங்கி என, பல்வேறு அரசு அலுவலகங்கள் ஜேடர்பாளை-யத்தில் இயங்கி வருகின்றன.அதனால், வடகரையாத்துார் கிராம பஞ்சாயத்தில் இருந்து பிரித்து, ஜேடர்பாளையத்தை தனி கிராம பஞ்சாயத்தாக அறி-விக்க வேண்டி நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை வைத்-துள்ளனர். இந்நிலையில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள், ஜேடர்பாளையம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வ-லர்கள், ஜேடர்பாளையத்தை தனி கிராம பஞ்சாயத்தாக அறிவிக்க வேண்டி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஜேடர்பாளையத்தில் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கையெழுத்து இயக்க ஒருங்-கிணைப்பாளர் சுந்தரம் தலைமை வகித்தார். மணிவேல் முன்-னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், 50க்கும் மேற்-பட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us