/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மல்லசமுத்திரத்தில் உள்ள ஏரிகளில் ஏலம் அறிவிப்பு
/
மல்லசமுத்திரத்தில் உள்ள ஏரிகளில் ஏலம் அறிவிப்பு
ADDED : நவ 21, 2025 01:50 AM
மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம் பெரிய ஏரி மற்றும் சின்ன ஏரி ஏலம் அறிவிப்பு வெளியாகியுள்ளது.சேலம் வடிநில கோட்டம், மல்லசமுத்திரத்தில் நீர்வளத்துறைக்குட்பட்ட, பெரிய ஏரி மற்றும் சின்ன ஏரி அமைந்துள்ளது. ஏரியில் வரும், 26ல், ராசிபுரம் பாசன பிரிவு உதவி பொறியாளர் அலுவலகத்தில், மீன்பாசி குத்தகை ஏலம் பெறுவதற்கு பொது ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் பங்கு பெறுபவர்கள் சின்ன ஏரிக்கு ரூ. 10ஆயிரம், பெரிய ஏரிக்கு ரூ.30 ஆயிரம் என வங்கி காசோலையாக கட்ட வேண்டும்.
ஆதார் அட்டை நகல் சமர்ப்பிக்க வேண்டும்.அதிகப்படியான தொகைகோரும் நபருக்கு ஏலம் அங்கீகரிக்கப்படும். ஏலத்தில் அதிக தொகை கோரிய நபர் ஏல முழு தொகையையும், வரிகளையும் உடனே செலுத்த வேண்டும். தவறினால் முன் வைப்பு தொகையை இழக்க நேரிடும். ஏலம் எடுத்தவர், இத்துறையின் உரிய அலுவலரிடமிருந்து ஆணை பெற்ற பின்னரே மீன் பிடிக்க வேண்டும். மீன் பிடிக்கும்போது பாசனத்திற்கு எவ்வித தடையும் ஏற்படுத்த கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

