/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நடைபாதையை பராமரிப்பு செய்ய வேண்டுகோள்
/
நடைபாதையை பராமரிப்பு செய்ய வேண்டுகோள்
ADDED : நவ 21, 2025 01:50 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் பகுதியில், ஆற்றின் குறுக்கே உள்ள உயர்மட்ட பாலத்தில் அமைந்துள்ள நடைபாதையை பராமரிப்பு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாமக்கல்-ஈரோடு மாவட்டத்தை இணைக்கும் வகையில், பள்ளிப்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் உள்ளது.
இதன் ஒரு பகுதியில், பொது மக்கள் பாதுகாப்பாக நடந்து செல்லும் வகையில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. நடைபாதையில் குப்பை கழிவுகள் குவிந்து காணப்படுகிறது. இதனால் நடைபாதை முழுவதும் சுகாதாரம் இல்லாமல் உள்ளது. இதனால் பாலத்தின் சாலை பகுதியில் மக்கள் நடந்து செல்கின்றனர். எனவே நடைபாதையை சுத்தம் செய்ய, பள்ளிப்பாளையம் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

