/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஏலம் ரத்து எதிரொலி்: மஞ்சள் சந்தை வெறிச்
/
ஏலம் ரத்து எதிரொலி்: மஞ்சள் சந்தை வெறிச்
ADDED : மே 07, 2025 01:53 AM
நாமகிரிப்பேட்டை:நாமக்கல் மாவட்டத்தில், மஞ்சள் விற்பனையில் நாமகிரிப்பேட்டை முக்கிய இடம் வகிக்கிறது.
தமிழகம் மட்டுமின்றி, இந்திய அளவில் உள்ள முக்கியமான மஞ்சள் சந்தையில் நாமகிரிப்பேட்டையும் ஒன்று. இங்கு கூட்டுறவு அமைப்பான ஆர்.சி.எம்.எஸ்., மற்றும் 15க்கும் மேற்பட்ட தனியார் மண்டிகள் மூலம் வாரந்தோறும் செவ்வாய்கிழமை மஞ்சள் விற்பனை நடந்து வருகிறது.
இந்நிலையில், நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, 15 நாட்களுக்கு முன் தொடங்கியது. நாளை தீமிதி விழாவும், தேர் திருவிழாவும் நடக்கவுள்ளது.
இதையொட்டி, நேற்று நடக்க இருந்த மஞ்சள் ஏலம் ரத்து செய்யப்பட்டது. இதனால், தனியார் மண்டிகள், ஆர்.சி.எம்.எஸ்., ஆகிய இடங்களில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.