ADDED : ஜூன் 07, 2025 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில், மதுவிலக்கு சம்பந்தமான குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட இரு சக்கரம், நான்கு சக்கர வாகனம் என, மொத்தம், ஐந்து வாகனங்கள் ஆயுதப்படை மைதானத்தில், நேற்று பொது ஏலம் விடப்பட்டன. நாமக்கல் மதுவிலக்கு பிரிவு கூடுதல் எஸ்.பி., தனராசு, டி.எஸ்.பி., சக்திவேல் ஆகியோர் தலைமை வகித்தனர்.
அதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். ஏலம் எடுக்க வந்தவர்களிடம் முன்பணமாக, 5,000 ரூபாய் டிபாசிட் பெறப்பட்டது. ஒவ்வொரு வாகனத்திற்கும் அரசு நிர்ணயம் செய்த தொகையின் கீழ் ஏலம் விடப்பட்டது. பலரும் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். முடிவில், நான்கு டூவீலர்கள், 70,448 ரூபாய்க்கு விற்பனையானது. மினி சரக்கு ஆட்டோ ஏலம் போகவில்லை.