sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சிந்தாமணி வல்லப கணபதி ஆலயத்தில் ஆவணி அவிட்டம் விழா கோலாகலம்

/

சிந்தாமணி வல்லப கணபதி ஆலயத்தில் ஆவணி அவிட்டம் விழா கோலாகலம்

சிந்தாமணி வல்லப கணபதி ஆலயத்தில் ஆவணி அவிட்டம் விழா கோலாகலம்

சிந்தாமணி வல்லப கணபதி ஆலயத்தில் ஆவணி அவிட்டம் விழா கோலாகலம்


ADDED : ஆக 10, 2025 12:47 AM

Google News

ADDED : ஆக 10, 2025 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், தமிழகத்தில், பெரும்பாலானோர் யஜூர் வேதிகளாக இருப்பதாலும், அவர்கள் அவிட்டம் நட்சத்திரத்தில் உபாகர்மம் மேற்கொள்வதாலும், தமிழில் உபாகர்மத்துக்கு, 'ஆவணி அவிட்டம்' என பொதுவாக சொல்லப்படுகிறது. 'ஆவணி அவிட்டம்' என்னும் ஆண்டு சடங்கு, உபநயனம் செய்துகொண்டு பூணுால் அணியும் பிராமணர், விஸ்வகர்மா மற்றும் செட்டியார் சமூகத்தினர், ஆடி அல்லது ஆவணி மாதங்களில் கடைப்பிடிக்கும் வழிபாடு. சமஸ்கிருதத்தில் இது, 'உபகர்மா' என வழங்கப்படுகிறது.

இதன் பொருள் தொடக்கம் என்பது. இன்றைய தினம் வேதங்களை படிக்க துவங்க நல்லநாள் எனவும் கருதப்படு கிறது. இந்த நாளில் சிறப்பு பூஜைள் செய்து, தாங்கள் அணிந்திருக்கும் பூணுாலை மாற்றி வழிபாடு செய்வது வழக்கம். அதன்படி, ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, ஸ்ராவண பவுர்ணி புன்யகாலத்தில், பூணுால் மாற்றும் விழா, நாமக்கல் அடுத்த வகுரம்பட்டி மகரிஷி நகரில் உள்ள சிந்தாமணி வல்லப கணபதி ஆலயத்தில் நடந்தது.

விஸ்வநாத சாஸ்திரிகள் தலைமையில், 90 பேர் பூணுால் மாற்றிக்கொண்டனர். அதேபோல், மாவட்டம் முழுவதும், பிராமணர்கள் ஆவணி அவிட்டத்தையொட்டி, பூணுால் மாற்றிக்கொண்டனர்.






      Dinamalar
      Follow us