/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பறவை காய்ச்சல் எச்சரிக்கை நாமக்கல்லில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்
/
பறவை காய்ச்சல் எச்சரிக்கை நாமக்கல்லில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்
பறவை காய்ச்சல் எச்சரிக்கை நாமக்கல்லில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்
பறவை காய்ச்சல் எச்சரிக்கை நாமக்கல்லில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்
ADDED : பிப் 19, 2024 12:41 PM
நாமக்கல்: ஆந்திராவில் பறவை காய்ச்சல் தாக்கம் ஏற்பட்டுள்ளதால், நாமக்கல் கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரமாகியுள்ளது.
ஆந்திரா மாநிலம் நெல்லுாரில் ஒரு கோழிப்பண்ணையில், கடந்த, 7ம் தேதி, 10,000 கோழிகள் திடீரென இறந்தன. பரிசோதனையில் 'எச்-5 என்-1' என்ற உருமாறிய வைரசால், பறவை காய்ச்சல் தாக்கி இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாநிலம் முழுதும் பறவை காய்ச்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் ஆந்திர எல்லையில் உள்ள திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு, பறவை காய்ச்சல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அதிகளவில் கோழிப்பண்ணை உள்ள நாமக்கல் மாவட்டத்தில், பண்ணைகளில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோழிப்பண்ணை வாசலில், பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் கலந்த தண்ணீர் வைக்கப்பட்டு வெளி ஆட்களும், வாகனங்களும் அதன் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். வெளியில் இருந்து வரும் வாகனங்களை கிருமிநாசினி தெளித்த பின்னரே பண்ணைக்குள் அனுமதிக்கின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது: பறவை காய்ச்சல் பாதிப்பு, தமிழகத்துக்கு வராது. தினசரி எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டாலே போதும். வெயில் தாக்கத்தால் பண்ணைகளை முறையாக பராமரிக்க வேண்டும். பிளாஸ்டிக் முட்டை அட்டையை தவிர்த்து, பேப்பர் அட்டையை பயன்படுத்தினால் அனைவருக்கும் நல்லது. அவ்வாறு பயன்படுத்தினால் முட்டை நுகர்வு, 10 சதவீதம் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

