/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நகராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த துாய்மை பணியாளர்களுக்கு பரிசு
/
நகராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த துாய்மை பணியாளர்களுக்கு பரிசு
நகராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த துாய்மை பணியாளர்களுக்கு பரிசு
நகராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த துாய்மை பணியாளர்களுக்கு பரிசு
ADDED : அக் 03, 2024 07:19 AM
குமாரபாளையம்: குமாரபாளையம் நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் தினமும் காலை, மாலையில் துாய்மை பணியாளர்கள் சுத்தம் செய்து வருகின்றனர். இவர்களில் சிறப்பான முறையில் பணியாற்றிய பணியாளர்களை கவு-ரவப்படுத்தும் விழா, நகராட்சி தலைவர் விஜய்-கண்ணன், ஆணையாளர் குமரன் தலைமையில் நடந்தது. இதில், சிறந்த துாய்மை பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சால்வை அணிவித்து, பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.
தொடர்நது, துாய்மை பணியாளர்களுக்கு நடந்த இரண்டாம் கட்ட மருத்துவ முகாமில் ரத்த பரி-சோதனை, சிறுநீர் பரிசோதனை, ஈ.சி.ஜி., கண் பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனை, கர்ப்பப்பை புற்றுநோய் உள்ளிட்ட பல பரிசோத-னைகள் நடத்தப்பட்டன. மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் சந்தானகி-ருஷ்ணன், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். எலந்தகுட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் பங்கேற்று சிகிச்சை வழங்கினர்.