/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குழந்தை திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வு கூட்டம்
/
குழந்தை திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வு கூட்டம்
குழந்தை திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வு கூட்டம்
குழந்தை திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வு கூட்டம்
ADDED : அக் 18, 2024 03:09 AM
குழந்தை திருமணத்திற்கு
எதிரான விழிப்புணர்வு கூட்டம்
பள்ளிப்பாளையம், அக். 18-
நாமக்கல் மாவட்டம் குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், பள்ளிப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில், நேற்று குழந்தை திருமணம் எதிர்ப்பு விழிப்புணர்வு கூட்டம், பொறியாளர் ரேணுகா தலைமையில், சுகாதார ஆய்வாளர் பன்னீர்செல்வம் முன்னிலையில் நடந்தது.
நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நளினி பேசியதாவது: பள்ளிப்பாளையம் பகுதியில் குழந்தை திருமணம் நடக்கிறது. இப்பகுதியில் குழந்தைகளுக்கு திருமணம் நடக்கிறதா என தெரிந்தால், 1098 எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும். கிராம பகுதியில் கண்காணிக்க வேண்டும். நீங்கள் தகவல் கொடுத்தால், திருமணத்தை நிறுத்தி குழந்தையை பாதுகாக்க முடியும். பொது மக்களிடமும், குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த பணியில் எல்லோரும் சேர்ந்து செயல்பட்டால் தான், பள்ளிப்பாளையம் பகுதி குழந்தை திருமணம் இல்லாத பகுதியாக மாற்ற முடியும்.
குழந்தைளை அடித்தல், துன்புறுத்தல், சித்ரவதை செய்தல், மற்றும் பாதுகாப்பு இல்லை என்றாலும், கடைகளில் குழந்தைகள் வேலை செய்தாலும், குழந்தைகள் தொடர்ந்து பள்ளிக்கு வரவில்லை என, தெரிந்தாலும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு பேசினார்.