/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில் போதை ஒழிப்பு, போக்சோ, ஆர்.டி.ஐ., விழிப்புணர்வு

ADDED : அக் 08, 2025 01:22 AM
மோகனுார், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரி யூத் ரெட்கிராஸ், போதைப்பொருள் தடுப்புக்குழு, என்.எஸ்.எஸ்., மற்றும் மாவட்ட காவல் துறை சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு, போக்சோ மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
நடந்தது.
கல்லுாரி முதல்வர்(பொ) ராஜேஸ்வரி தலைமை வகித்தார். நாமக்கல் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன், போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள், அவற்றை தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார்.
மோகனுார் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ், போதைப்பொருள்கள் இல்லாத தமிழகம் செயலி பயன்பாடு பற்றியும், காவல் உதவி செயலி பயன்பாடு குறித்தும் விளக்கினார். மேலும், இந்த செயலியில் பதிவு செய்யப்படுபவர்களின் விபரம் ரகசியம் காக்கப்படும் என, தெரிவித்தார்.
எஸ்.ஐ., கவிப்பிரியா, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், பொது தகவல்கள் மட்டுமே, மத்திய, மாநில அரசிடம் கேட்க முடியும். அதற்கு உரிமை உள்ளது. அவ்வாறு கேட்கும் தகவல்களை கிடைக்காத பட்சத்தில் மேல்
முறையீடு செய்யவும் உரிமை உள்ளது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதேபோல், 'அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகளில், பெண்களுக்கு எதிராக, அத்துமீறல்களில் ஈடுபட்டால், போக்சோ சட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள், பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
கல்லுாரி யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் சந்திரசேகரன், போதைப்பொருள் தடுப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பார்வதி, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.