/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'மாணவர்களின் எதிர்காலம்' விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
'மாணவர்களின் எதிர்காலம்' விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : அக் 15, 2025 01:08 AM
மல்ல சமுத்திரம், மல்லசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நேற்று மாணவர்களின் எதிர்காலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் மாணிக்கம் தலைமை வகித்தார். கல்வி ஆலோசகர் யுவராஜ், 'பெற்றோர்களே உங்கள் சொத்து;
அவர்களை சிறந்த முறையில் பாதுகாக்க வேண்டும்; புத்தகங்கள் நிறைய படித்து அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்; போதை பொருட்களுக்கு அடிமையாகாமல் உடல்நலத்தை சிறந்த முறையில் பேணிகாக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். 9 முதல் பிளஸ் 2 மாணவர்கள், 500 பேர் கலந்துகொண்டனர். மல்லசமுத்திரம் இன்ஸ்பெக்டர் சுதா, எஸ்.ஐ., ரஞ்சித்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.