/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தீபாவளி பண்டிகையின்போது விபத்து ஏற்பட்டால் உதவிக்கு தயார் நிலையில் 26 ஆம்புலன்ஸ் வாகனம்
/
தீபாவளி பண்டிகையின்போது விபத்து ஏற்பட்டால் உதவிக்கு தயார் நிலையில் 26 ஆம்புலன்ஸ் வாகனம்
தீபாவளி பண்டிகையின்போது விபத்து ஏற்பட்டால் உதவிக்கு தயார் நிலையில் 26 ஆம்புலன்ஸ் வாகனம்
தீபாவளி பண்டிகையின்போது விபத்து ஏற்பட்டால் உதவிக்கு தயார் நிலையில் 26 ஆம்புலன்ஸ் வாகனம்
ADDED : அக் 15, 2025 01:07 AM
நாமக்கல், 'தீபாவளி பண்டிகை நேரத்தில் விபத்து ஏற்பட்டால், உடனடியாக நடவடிக்கை எடுக்க, 26 எண்ணிக்கையில், 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவைகள், 24 மணி நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன' என, நாமக்கல் மாவட்ட, 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவை மேலாளர் அறிவுக்கரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
தீபாவளி திருநாளை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில், தமிழக அரசு சுகாதாரத்துறை திட்டத்தின் கீழ் செயல்படும், 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மருத்துவம், போலீஸ் மற்றும் தீயணைப்பு துறைகளுடன் இணைத்து, 108 அவசர சேவை தீபாவளி திருநாளன்று பொதுமக்களின் நலனுக்காக, 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளது.
அவசர தேவைக்கேற்ப திடீர் நடவடிக்கை எடுக்கவும், 'ஹாட்ஸ்பாட்' சாலைகளின் தன்மைகளை கருத்தில் கொண்டு, ஆங்காங்கே, 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவை வாகனங்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மொத்தம், 26 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவ உதவியாளர்கள், டிரைவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும், அனைத்து 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவை வாகனங்களிலும், தீயணைக்க பயன்படும் கருவிகள், மீட்பு உபகரணங்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், அவசர மருந்து பொருட்கள் தேவையான அளவில் இருப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு விரைவாக பதிலளிக்க, 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவையில், மாநில கட்டுப்பாட்டு அறை ஜி.பி.எஸ்., அடிப்படையில் இயங்கும். மேலும், அனைத்து பொது அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளின் பிரத்யோக மொபைல் எண் கொடுக்கப்பட்டுள்ளது.
நோயாளியை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு கிளம்பும்போது, அருகில் உள்ள மருத்துவமனைக்கு தகவல் அளித்து உடனே சிகிச்சை அளிப்பதற்கு ஏஎதுவாகவும், அதிக டாக்டர்கள் தேவைப்படும்போது, டாக்டர்களை வரவழைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்
பட்டுள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.