/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தீ விபத்தை தவிர்க்க விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
தீ விபத்தை தவிர்க்க விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : அக் 31, 2024 06:37 AM
குமாரபாளையம்: விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து, குமாரபாளையம் அரசு பள்ளியில், தீயணைப்புத்-துறையினர் செயல்முறை விளக்கமளித்தனர். அப்போது, தீயணைப்புத்துறை அலுவலர் ஜெயச்-சந்திரன் பேசியதாவது: பட்டாசு பற்ற வைக்கும்-போது, தள்ளி நின்று பற்ற வைக்க வேண்டும்; வெடிகளை வெடிக்கும்போது திரிகளை கிள்ளி-விட்டு வைக்க வேண்டும்.
மத்தாப்பு வைக்கும்போது பாதுகாப்பாக வைக்க வேண்டும். பருத்தி ஆடைகளை அணிவது, பாலிஸ்டர் போன்ற ஆடைகளை அணிந்து பட்-டாசு வெடிக்க கூடாது. ஆறு, ஏரி, குளங்கள், கிணறு ஆகிய நீர் நிலைகளில் ஆபத்தான நிலையில் இருக்கும் நபரை, தீ விபத்து நடந்த இடத்தில் சிக்கிய நபரை செயல்முறை விளக்க-மளித்தபடி எளிய வழிகள் மூலம் காப்பாற்றலாம்.இவ்வாறு அவர் பேசினார்.

