/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போதை இல்லா கொல்லிமலையை உருவாக்க விழிப்புணர்வு
/
போதை இல்லா கொல்லிமலையை உருவாக்க விழிப்புணர்வு
ADDED : செப் 21, 2025 12:58 AM
நாமக்கல், போதை இல்லாத பகுதியாக கொல்லிமலையை உருவாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி, கொல்லிமலை செம்மேட்டில் நடந்தது.மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் எஸ்.பி., தனராசு, தாசில்தார் சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் எஸ்.பி., விமலா பேசியதாவது: கள்ளச்சாராயம் அருந்துவதால், குடும்பத்தில் பொருளாதார இழப்புகள் ஏற்படும்.
உடல் நலம் பாதிப்பு உண்டாகும். கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், விற்பவர்கள் குறித்து புகார் அளிப்பவர்களுக்கு, அரசு அறிவித்துள்ள சன்மானம் பெற்று தரப்படும். கள்ளச்சாராயம் காய்ச்சினால் அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்கும். வி.ஏ.ஓ.,க்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் முழு ஒத்துழைப்பால்தான், போதை இல்லாத கொல்லிமலையை உருவாக்க முடியும். இவ்வாறு பேசினார்.
வனச்சரகர் சுகுமார், வணிகர் சங்கத்தலைவர் வருணன், செயலர் குமாரசாமி, ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் ஆனந்தகுமார், பல்வேறு அமைப்பு நிர்வாகிகள், மலைவாழ் மக்கள் பங்கேற்றனர்.