ADDED : டிச 16, 2024 03:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார்:கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி, ப.வேலுார், செட்டியார் தெருவில் உள்ள பால ஐயப்ப சுவாமிக்கு, 11ம் ஆண்டாக சிறப்பு பூஜை, திருவீதி உலா நடந்தது. நேற்று காலை, 10:00 மணிக்கு கணபதி ஹோமம், அதனை தொடர்ந்து வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேகம் நடந்தது.
மதியம், 1:00 மணிக்கு தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று மாலை, 6:00 மணிக்கு பால ஐயப்ப சுவாமி திருவீதி உலா நடந்தது. இதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள், பக்-தர்கள் கலந்து கொண்டனர்.

