/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பேக்கரியில் குட்காரூ.50,000 அபராதம்
/
பேக்கரியில் குட்காரூ.50,000 அபராதம்
ADDED : ஏப் 18, 2025 02:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, வாய்க்கால் மேடு பகுதியில் செயல்பட்டு வரும் பேக்கரியில், நேற்று வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரங்கநாதன், லோகநாதன் மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டு, இரண்டு கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, பேக்கரியை பூட்டி, 'சீல்' வைக்கப்பட்டது. இரண்டாவது முறையாக தொடர்ந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததால், 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

