/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பெரும்பாலியில் குளிக்க சென்றவர் பலி
/
பெரும்பாலியில் குளிக்க சென்றவர் பலி
ADDED : அக் 04, 2024 03:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: பெரும்பாலியில், குளிக்க சென்றவர் தவறி விழுந்து பலியானார்.
ராசிபுரம் அடுத்த, போதமலைக்கு செல்லும் வனப்பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கும் பாலிகள் உள்ளன.
இதில், பெரும்பாலி என்ற இடத்தில், 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருந்தது. அவ்வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று பார்த்த போது, பாலிக்கு குளிக்க சென்றவர் தவறி விழுந்து இறந்தது தெரிந்தது. இது குறித்து விசாரித்த போது, வடுகம் அடுத்த அய்யம்பாளையத்தை சேர்ந்த சுந்தரராஜன் மகன் ஜெகதீஸ், 45, என்பது தெரிந்தது. சடலத்தை கைப்பற்றிய ராசிபுரம் போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.