/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆயுத பூஜையை முன்னிட்டு வாழைத்தார் விலை உயர்வு
/
ஆயுத பூஜையை முன்னிட்டு வாழைத்தார் விலை உயர்வு
ADDED : செப் 30, 2025 01:41 AM
ப.வேலுார், ப.வேலுார், பாண்டமங்கலம், பொத்தனுார், நன்செய் இடையாறு, குப்பிச்சிபாளையம், மோகனுார், ப.வேலுார், அண்ணா நகர், பிலிக்கல்பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், கொத்தமங்கலம், சிறுநல்லிகோவில், அய்யம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர். இங்கு, பூவன், பச்சைநாடன், கற்பூரவல்லி, ரஸ்தாளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகளை பயிரிட்டு, தற்போது வாழைத்தார்களை வெட்டி வருகின்றனர்.
இவை, ப.வேலுாரில் செயல்படும் தினசரி ஏல மார்க்கெட்டில் விற்பனை செய்கின்றனர். நாமக்கல், சேலம், கரூர், திருச்செங்கோடு, ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை சேர்ந்த வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர். நாளை ஆயுத பூஜையைொட்டி, 5,500 வாழைத்தார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
நேற்று நடந்த ஏலத்தில், கடந்த வாரம், 300 ரூபாய்க்கு விற்ற பூவன் வாழைத்தார், நேற்று, 550 ரூபாய்; 300 ரூபாய்க்கு விற்ற ரஸ்தாலி, 500 ரூபாய்; 350 ரூபாய்க்கு விற்ற கற்பூரவல்லி, 600 ரூபாய்; மொந்தன் காய், 5 ரூபாய்க்கு விற்றது, 7 ரூபாய் என, விற்பனை செய்யப்பட்டது.